Obituary of Suntharambikai Sivanarayanamoorthy
Please share a memory of Suntharambikai to include in a keepsake book for family and friends.
Mrs. Suntharambikai Sivanarayanamoorthy, retired teacher of Chavakachcheri Hindu College, Sri Lanka, passed away in Toronto, Canada, on September 25, 2025. She was the beloved wife of the late Mr. Saravanamuttu Sivanarayanamoorthy, the loving mother of Sivamangai, Rhenugadevi, Giritha, and Sivoththaman, and cherished mother-in-law of (the late) E. Kailayanathan, V. Velmurugiah, C. Vipulanandan, and S. Sutharshini. She will be fondly remembered by grandchildren Vagheeshayan, Lakshana (Sivavirathan), Ramya (Jordan), Geethanjali, Niresha (Reed), Hariharan, Yarlini (Nishith), Prashanth, and Sathya, as well as her loving great-grandchild, Jai.
She was the daughter of the late Mr. and Mrs. Manickavasagar, the daughter-in-law of the late Mr. and Mrs. Saravanamuttu, and the loving sister of Mrs. K. Ranganathan, the late Messrs. Mahadevan, Vamadevan, and Subramaniasivam, and the late Mrs. A. Sathasivam.
A memorial service and cremation will be held on September 29, 2025, from 10:00AM to 1:00PM, at Lotus Funeral and Cremation Centre, Etobikoke (Toronto).
யாழ்/ கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்/ சாவகச்சேரி, மற்றும் கனடா Edmonton, Toronto, ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டவராகிய, யாழ்/ சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியை, திருமதி. சுந்தராம்பிகை சிவநாராயணமூர்த்தி அவர்கள் கடந்த 25-09-2025 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கவாசகர், பரஞானம் தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, மங்கைற்கரசி தம்பதியின் அன்பு மருமகளும்,
திருமதி. கனகாம்பிகை ரங்கநாதன், மற்றும் காலஞ்சென்றவர்களான திருவாளர்கள் மகாதேவன், வாமதேவன், சுப்ரமணியசிவம், காலஞ்சென்ற திருமதி சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திரு. சரவணமுத்து சிவநாராயணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
சிவமங்கை, ரேணுகாதேவி, கிரிதா, சிவோத்தமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், (காலஞ்சென்ற) கைலாயநாதன், வேல்முருகையா, விபுலானந்தன், சுதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாகீஷயன், லக்ஷனா (சிவவிரதன்), ரம்யா (ஜோர்டன்), கீதாஞ்சலி, நிரேஷா (றீட்), ஹரிஹரன், யாழினி (நிஷித்), பிரஷாந்த், சத்யா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஜெய் யின் பாசமிகு கொள்ளுப்பாட்டியும், ஆவார்.
ஈமக்கிரியைகள் 29-09-2025 அன்று 10:00AM முதல் 1:00PM வரை, Lotus Funeral and Cremation Centre, (Toronto) Etobikoke, இல் நடைபெறும்.